நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரையில் உள்ள இரத்தக் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்கும். குறைமாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த வளர்ச்சி முழுமையடைவதில்லை. கண்களின் வளர்ச்சியும் முழுமை அடைவதில்லை. தேவையற்ற இரத்தக் குழாய்கள் உருவாகும். அதன் விளைவாக விழித்திரையில் இரத்தக் கசிவும் விழித்திரை விலகலும் நிரந்தரமாக பார்வை பறிபோதலும் நிகழலாம்.

எப்படி கண்டுபிடிப்பது?

குழந்தை குறைமாதத்தில் பிறந்தாலோ, 2 கிலோவுக்கும் குறைவான எடையுடன் இருந்தாலோ, அந்தக் குழந்தையை குழந்தை நல மருத்துவர்கள், கண் சிகிச்சை நிபுணர்களிடம் பிறந்த ஒரு மாதத்துக்குள் காண்பிக்க வேண்டும்.

சில குழந்தைகள் பிறந்து ஒரு மாதமாகியும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் கண் சிகிச்சை நிபுணரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று குழந்தையின் கண்களை பரிசோதிக்கக்கூடும்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகும் கண் மருத்துவர் சொல்லும் இடைவேளைகளில் குழந்தையின் கண்களை பரிசோதிக்க வேண்டும்.

பெண்கள் பத்து மாதங்கள் முடிவதற்குள்ளேயே குழந்தை பெறுவதற்கு காரணம், கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் தொற்று. அதை குணப்படுத்திவிட்டாலே இந்த பாதிப்பு பெருமளவில் குறையும்.

Share.
Exit mobile version