பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், உனவடுன, தரம்பவில் உள்ள தேவாலயத்தின் பூசாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

காலி மற்றும் கொழும்பில் 09 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட 9 சிறுவர்களை சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காலி பிரதேசத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று காலி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version