ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (12) நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், தனிஷ் அலி உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share.
Exit mobile version