பாண் இறாத்தலின் நிறை மற்றும் விலை குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாண் இறாத்தலின் நிறை மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.
கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு அமைய, பாண் இறாத்தலின் விலை அதிகரிக்கப்பட்டதா? என்ற கேள்வி உள்ளது.
அத்துடன், கோதுமை மா, சீனி என்பனவற்றின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பணிஸ் விலை அதிகரிக்கப்பட்டதா, என்ற கேள்வியும் உள்ளது.
எனவே, இது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையானது, நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் கவனம் செலுத்தி, அவர்களுக்காக முன்னிலையாவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, இதற்கு பதிலளிக்கும் வகையில், வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.