தாய்லாந்துக்கு விஜயம் செய்ய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனி சங்கராத் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர கடவுச்சீட்டின் கீழ், கோட்டாபய ராஜபக்சவை 90 நாட்கள் தங்கியிருக்கும் நோக்கில் உள்நுழைய அனுமதிப்பதில் தாய்லாந்திற்கு எந்தப் பிரச்சினையையும் தனி சங்கராத் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கோட்டாய ராஜபக்ஷ எப்போது வருவார் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிடவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி அன்று தாய்லாந்தின் பெங்கொக் நகருக்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக இதற்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.