இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஒகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விருந்தளித்தார்.
இந்த கூட்டத்திற்கான செலவு ரூ. 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.