இலங்கையில் உள்ள 66 MOH (மருத்துவ அலுவலகம்) பிரிவுகள் டெங்கு அதிக அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மீரிகம, வாத்துவ, அக்மீமன, பலப்பிட்டிய, ஹபராதுவ, ஹம்பாந்தோட்டை, வெலிகம, குளியாபிட்டிய மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேசங்களில் டெங்கு தொடர்ந்தும் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மழையினால் டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 48,351 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

Share.
Exit mobile version