சந்தையில் கடந்த காலங்களில் அதிகரித்திருந்த அரிசி விலை எதிர்வரும் சில நாட்களில் வீழ்ச்சியடையும் என அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது உள்நாட்டு அரிசியின் விற்பனை குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் டீ.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து உதவியாக நாட்டுக்கு அரிசி கிடைக்கப்பெற்றதோடு சந்தையில் அரிசி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அரிசியின் விலை வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிஸ்கட், சவர்க்காரம் உள்ளிட்ட மேலும் சில பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல சந்தர்ப்பங்களில் பிஸ்கட், சவர்காரம், நூடில்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை திருத்தி அவற்றை சந்தைக்கு அனுப்புவதற்கு குறித்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.

இதன்காரணமாக நுகர்வோரும் வர்த்தகர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பொருட்களின் விலை 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவிக்கிறது.

தொடர்ந்து விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக குறித்த பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் இருந்து நுகர்வோர் விலகியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Exit mobile version