இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அதேபோல், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

Share.
Exit mobile version