சிங்கராஜ மழைக்காடுகளை அகற்றி நீர்த்தேக்கங்கள் அல்லது வீதிகள் அமைக்கப்படமாட்டாது என வனப் பாதுகாப்பு திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றில் திங்கட்கிழமை (8) உறுதியளித்துள்ளது.
சிங்கராஜ வனச்சரகத்தில் உள்ள அரச வன நிலங்களை அகற்றுவது, நீர்த்தேக்கங்கள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி என்பவற்றை நிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வனப் பாதுகாப்புத் துறை சார்பில் ஆஜரான மூத்த அரசு வழக்கறிஞர், சாலைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டுவதற்கு முன்மொழியப்பட்ட எந்தவொரு திட்டத்திற்கும் சிங்கராஜா மழைக்காடுகள் தீண்டப்படாமல் இருக்கும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
இவ் விண்ணப்பம் செப்டம்பர் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்.