முச்சக்கர வண்டிகளில் முழுநேர வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு திருத்தப்படும் என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (ஒகஸ்ட் 7ஆம் திகதி) காலி ஹினிதும பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை அவதானிக்க வந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, வாடகை முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ‘ஓரிரு நாட்கள் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு அரை மணி நேரத்தில் எரிபொருள் கிடைக்கும் என்ற நிலைக்கு தற்போது வந்துள்ளோம்’. இதை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version