டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் வீதத்தில் விரைவான அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் காரணமாக அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் விஜேசூரியவின் கூற்றுப்படி, 12 குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்திய டொக்டர் விஜேசூரிய, காய்ச்சல், இருமல், சளி மற்றும் தொண்டை தொற்றுக்கள் காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும் என சுட்டிக்காட்டினார்.

Share.
Exit mobile version