இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியில் இருந்து உருவாகியுள்ளது என்று உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார்.

நச்சுக் கலவையான விலைவாசி உயர்வு பயிர் விளைச்சல் குறைதல் உக்ரைன் போரின் வீழ்ச்சி மற்றும் முக்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த அரசாங்கத்திடம் நிதி பற்றாக்குறை என்பன உணவு பற்றாக்குறைக்கான காரணங்கள் என்று அவர் விபரித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் எரிபொருள் உணவு மற்றும் உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தேவையான பணம் இல்லை என்று குறிப்பிட்ட அவர் நன்கொடையாளர்களின் ஆதரவை வலியுறுத்தியுள்ளார்.

உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் சமீபத்திய மதிப்பீட்டின்படி இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் – அதாவது மொத்த சனத்தொகையில் 30 சதவிகித மக்கள் – உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.

இலட்சக்கணக்கான குடும்பங்கள் அரிசி போன்ற முக்கிய உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாத வகையில் 90 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் இலங்கை போராடி வருகிறது.

2018ஆம் ஆண்டிலிருந்து போசனைமிக்க உணவின் சராசரி மாதச் செலவு 156 சதவீதம் உயர்ந்துள்ளது.

எனவே அவசர தலையீடு இல்லாமல் 22 மில்லியன் மக்கள்தொகைக்கு உணவளிக்கும் திட்டங்கள் இருண்டதாகவே இருப்பதாக சித்தீக் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நாட்டில் எரிபொருள் இல்லாததால் சுமார் 200,000 கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். சிறு விவசாயிகளும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தநிலையில் உணவு உலக திட்டம் அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகளை கடந்த ஜூன் நடுப்பகுதியில் ஆரம்பித்துள்ளது.

இதன்படி வறுமையான நிலையில் வாழும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு கொடுப்பனவு பத்திரங்களை விநியோகித்தது. இந்தத் திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் 3.4 மில்லியன் மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share.
Exit mobile version