பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளிட்ட பல பொருட்களின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பு 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை வரத்தக சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஜ.தேவபிரான் தெரிவித்துள்ளார்.

330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின், மொத்த விலை 270 ரூபாவாகவும், 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் bமொத்த விலை 135 ரூபாவாகவும், 550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டு, 400 ரூபாவாகவும்,

200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின், மொத்த விலை 150 ரூபாவாகவும்,

ஆயிரத்து 900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய், ஆயிரத்து 300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை வரத்தக சங்கத்தின் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய பொருட்களின் மொத்த விலை 40 முதல் 50 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளன.

நிலையான அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டமை, வங்கிகள் டொலரை வழங்குகின்றமை மற்றும் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டமை என்பன, இந்த விலை குறைப்புக்கு காரணமாகும் என புறக்கோட்டை வரத்தக சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஜே.தேவபிரான் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version