தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா 11 போலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தைத் தொடர்ந்து தாய்வானின் கடற்கரையிலிருந்து மைல் தொலைவில் இந்த ஏவுகனைகள் ஏவப்பட்டுள்ளன. சீனாவின் வலுவான நட்பு நாடான வடகொரியா அண்மைய மாதங்களில் மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தி பிராந்தியத்தில் பதற்றத்தை தூண்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே சீனாவும் அதனை பின்பற்றுவதாக தாய்வான் குற்றம் சுமத்தியுள்ளது.

தாய்வானை பிரிந்து சென்ற மாகாணமாக சீனா பார்க்கிறது அது இறுதியில் தேவைப்பட்டால் பலவந்தமாகவேணும் அது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று சீனா கூறியுள்ளது.

அமெரிக்காவும் தாய்வானை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. எனினும் அந்த தீவுடன் ஒரு வலுவான உறவைப் பேணுகிறது.
அத்துடன் தாய்வான் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்களையும் அமெரிக்கா விற்பனை செய்து வருகிறது.

இந்தநிலையில் சீனாவின் ஏவுகனை வீச்சை அடுத்து தாய்வானும் தமது பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்தி நிலைமையை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

சீனாவின் ஏவுககணை வீச்சுகள் மற்றும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகள் சிலவற்றில் நடைபெறுகின்றன.
இதனால் கப்பல் பாதைகள் மற்றும் தாய்வான் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் விநியோகச் சங்கிலிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தாய்வான் விமான நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Share.
Exit mobile version