தேவைக்கு ஏற்ப QR குறியீட்டை ரத்து செய்து புதிய QR குறியீட்டை கோரும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் ஊடாக பெறப்படும் QR குறியீட்டை வேறு எவருக்கும் காட்சிப்படுத்தக் கூடாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமக்குச் சொந்தமான QR குறியீட்டைப் பயன்படுத்தி வேறு எந்த நபரும் எரிபொருளைப் பெற முடியாதபடி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற சிலர் முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமையால், போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version