ஏப்ரல் 4 ஆம் தேதி, அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் நமது குடிமகனின் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்து MAS ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அடுத்தடுத்த நிகழ்வுகளின் அடிப்படையில், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை அமைதியான மற்றும் நிலையான முறையில் தீர்க்க உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கையின் அவசியத்தை MAS மீண்டும் வலியுறுத்துகிறது.

ஒரு பொறுப்பான அமைப்பாக, மாற்றம் மற்றும் நல்லாட்சிக்கான அழைப்பை நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம், மேலும் நாட்டின் தலைவர்கள் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, சட்ட மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை முதலாளி மற்றும் ஏற்றுமதியாளர் என்ற வகையில், இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் எங்களின் பங்கை MAS நன்கு அறிந்திருக்கிறது. இதற்காக, எங்களது 92,000 கூட்டாளிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் நாட்டின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களது கடமைகளை இடையூறு இல்லாமல் வழங்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

எமது வரலாற்றில் பல கொந்தளிப்பான மற்றும் முக்கியமான சந்திகளின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக ஆடைத் தொழிற்துறை விளங்கியுள்ளது. நாம் ஒன்றிணைந்து, இந்த நெருக்கடியைச் சமாளித்து, நமது நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்ப நிலையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எப்பொழுதும் போல், நெருக்கடியால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம், எங்களின் சமூக நலத்திட்டங்களின் மூலம், இந்த இக்கட்டான நேரத்தில் தீவு முழுவதும் உள்ள எங்கள் சமூகங்களுக்கு MAS ஆதரவளித்து வருகிறது.

அனைத்து இலங்கையர்களுக்கும் – பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருங்கள்.

மாற்றம் என்பது தைரியம்.

MAS ஹோல்டிங்ஸ்.

Share.
Exit mobile version