இரத்தினபுரி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் களு கங்கை கசிவு மட்டத்தை எட்டியுள்ளதால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரியுள்ளது.

கனமழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வரா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியின் மேல் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நிலைமை பெரும்பாலும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களும், அப்பகுதிகளின் ஊடாக பயணிப்பவர்களும் தொடர்ந்தும் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version