2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை மன்னார் மணல் கரையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 47 கிலோ 240 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கடத்தல்காரர்களால் 19 பொதிகளை உள்ளடக்கிய சரக்குகள் அப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்தன மற்றும் கையிருப்பு சுமார் 47 கிலோ மற்றும் 240 கிராம் (ஈரமான எடை) எடையுள்ளதாக இருந்தது. அப்பகுதியில் கடற்படை நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்கள் கேரளா கஞ்சாவை கொண்டு செல்ல முடியாமல் நிலத்தடியில் மறைத்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 14 மில்லியன் எனவும் தற்போது அதன் கையிருப்பு சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version