நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (31) இரவு ஆரம்பித்த கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஹட்டன் பகுதியில் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மலையக பிரதேசங்களில் வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கினிகத்தேன – பொல்பிட்டிய பிரதேசத்தில் களனி ஆற்றின் மேல் நீரோடை கிளையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு பெண் (60) மற்றும் அவரது பேத்தி (05) ஆகியோர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கினிகத்தேன விதுலிபுர கிராமத்தில் மண்சரிவினால் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனையடுத்து இரண்டு வீடுகளிலும் வசிக்கும் 6 பேரில் 38 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மண்சரிவு மற்றும் பாறைகள் வீதியில் விழுந்துள்ளதால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்துடன், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஹட்டனில் இருந்து கித்துல்கல வரையான பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்து வீழ்ந்துள்ளன.

பின்வரும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ளன:
• கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை
• பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை

Share.
Exit mobile version