ஆசிய பிராந்தியத்தில் நிலவும் இராஜதந்திர முரண்பாடுகளை தீர்க்கும் மையமாக இலங்கை மாற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் பி.திகாம்பரம் இன்று தெரிவித்துள்ளார்.

சீன உளவுக் கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுடன் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பேசும் போதே “இலங்கையானது இந்தியா மற்றும் சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் மற்றும் இராஜதந்திர முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரு மையமாக மாற வேண்டும்.” என திரு. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கை இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், அண்டை நாடான இந்தியாவுடனான அதன் உறவுகள் இதற் பாதகத்தால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய நெருக்கடியான காலப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் முக்கியத்துவம் இலங்கைக்கு கிடைத்த இந்திய உதவியின் மூலம் போதுமான அளவு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

Share.
Exit mobile version