எரிபொருட்களின் விலை, கோதுமை மா உயர்வை கருத்திற்கொண்டு மதியநேர உணவுப்பொதி மற்றும் கொத்து ரொட்டியின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்புடன் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படுமென உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.