முன்னாள் அமைச்சர்களுடனான விசேட சந்திப்பொன்று ஏப்ரல் 16 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பார் என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இணங்காததால் புதிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், இந்த ஆட்சியை தொடர்வதற்காக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version