வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

தற்போதைய உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா சுட்டிக்காட்டியுள்ளார்.

G20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் உரையாற்றிய கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

உக்ரைன் போருடன், உலக உணவு மற்றும் பொருட்களின் விலைகள் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், உலகளாவிய நிதி நிலைமைகள் எதிர்பார்த்ததை விட இறுக்கமாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கைத் தலையீடு தேவை எனவும், இலங்கையை எச்சரிக்கை அடையாளமாக சுட்டிக்காட்ட முடியும் எனவும் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version